கர்நாடகாவில் ரூ.11,000 கோடி மதிப்பிலான 33 நெடுஞ்சாலை திட்டங்களுக்கு மத்திய அமைச்சர் நிதின் கட்கரி நாளை அடிக்கல்


கர்நாடகாவில் ரூ.11,000 கோடி மதிப்பிலான 33 நெடுஞ்சாலை திட்டங்களுக்கு மத்திய அமைச்சர் நிதின் கட்கரி நாளை அடிக்கல்
x
தினத்தந்தி 18 Dec 2020 11:50 PM IST (Updated: 18 Dec 2020 11:51 PM IST)
t-max-icont-min-icon

கர்நாடகாவில் ரூ.11,000 கோடி மதிப்பிலான 33 நெடுஞ்சாலை திட்டங்களுக்கு மத்திய அமைச்சர் நிதின் கட்கரி நாளை அடிக்கல் நாட்டுகிறார்.

புதுடெல்லி,

கர்நாடகாவில் ரூ.11,000 கோடி மதிப்பிலான 33 நெடுஞ்சாலை திட்டங்களுக்கு மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுங்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி நாளை ( சனிக்கிழமை) காணொலி காட்சி மூலம் அடிக்கல் நாட்டுகிறார்.

காணொலி காட்சி மூலம் நடைபெறும் இந்த நிகழ்ச்சிக்கு அம்மாநில முதல்-மந்திரி எடியூரப்பா தலைமை தாங்குகிறார். மத்திய அமைச்சர்கள் வி.கே.சிங், கோவிந்த் எம்.கர்ஜோல், கர்நாடக துணை முதல்-மந்திரி மற்றும் அம்மாநில அமைச்சர்கள் ஆகியோர் இதில் கலந்து கொள்கின்றனர்.

பெங்களூரு, மைசூரு உட்பட மொத்தம் 33 இடங்களில் சாலைகள் அமைக்கப்படுகின்றன. சுமார் 1200 கி.மீ தூரத்துக்கு இந்த சாலைகள் ரூ.11 ஆயிரம் கோடி செலவில் அமைக்கப்படுகின்றன. இதன் மூலம் கர்நாடகாவில் சாலைகள் இணைப்பு மேம்படும், பொருளாதார வளர்ச்சிக்கு வழிவகுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Next Story