உள்நாட்டு விமானங்களில் பயணிகள் எண்ணிக்கை அதிகரிப்பு


உள்நாட்டு விமானங்களில் பயணிகள் எண்ணிக்கை அதிகரிப்பு
x
தினத்தந்தி 18 Dec 2020 6:59 PM GMT (Updated: 18 Dec 2020 6:59 PM GMT)

உள்நாட்டு விமானங்களில் கடந்த மாதம் 63½ லட்சம் பேர் பயணம் செய்து உள்ளனர்.

புதுடெல்லி, 

கொரோனாவால் மார்ச் இறுதியில் ரத்து செய்யப்பட்ட உள்நாட்டு விமான சேவை பின்னர் மே மாதத்தில் மீண்டும் தொடங்கப்பட்டது. குறைவாக இயக்கப்பட்ட விமான சேவைகள் தற்போது படிப்படியாக அதிகரிக்கப்பட்டு வருகிறது. தற்போது, உள்நாட்டு விமானங்களில் அதிகளவில் பயணிகள் பயணிக்க தொடங்கி உள்ளனர்.

இதன்படி கடந்த அக்டோபர் மாதத்தில் 39 லட்சத்து 43 ஆயிரமாக இருந்த உள்நாட்டு விமான பயணிகள் எண்ணிக்கை அக்டோபர் மாதத்தில் 52 லட்சத்து 71 ஆயிரமாக அதிகரித்தது.

இது கடந்த மாதத்தில் (நவம்பர்) மேலும் அதிகரித்து, அந்த மாதத்தில் மொத்தம் 63 லட்சத்து 54 ஆயிரம் பேர் உள்நாட்டு விமானங்களில் பயணம் செய்து உள்ளனர். இருப்பினும் இது கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் உள்நாட்டு விமானங்களில் பயணம் செய்த பயணிகளின் எண்ணிக்கையை விட 51 சதவீதம் குறைவு ஆகும்.

இந்த தகவலை உள்நாட்டு விமான போக்குவரத்து இயக்குனரகம் தெரிவித்து உள்ளது.

Next Story