உள்நாட்டில் வடிவமைக்கப்பட்ட 3 தளவாடங்களை முப்படைகளிடம் ராஜ்நாத்சிங் ஒப்படைத்தார்


உள்நாட்டில் வடிவமைக்கப்பட்ட 3 தளவாடங்களை முப்படைகளிடம் ராஜ்நாத்சிங் ஒப்படைத்தார்
x
தினத்தந்தி 19 Dec 2020 12:50 AM IST (Updated: 19 Dec 2020 12:50 AM IST)
t-max-icont-min-icon

உள்நாட்டில் வடிவமைக்கப்பட்ட 3 தளவாடங்களை பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் முப்படைகளிடம் ஒப்படைத்தார்

புதுடெல்லி,

பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தால் (டி.ஆர்.டி.ஓ.) உள்நாட்டில் வடிவமைக்கப்பட்ட 3 தளவாடங்களை முப்படைகளிடம் ராணுவ மந்திரி ராஜ்நாத்சிங் நேற்று ஒப்படைத்தார். டெல்லியில் உள்ள டி.ஆர்.டி.ஓ. பவனில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது. 

இந்திய கடல்சார் சூழ்நிலையை எச்சரிக்கும் சாதனத்தை கடற்படை தளபதி கரம்பீர் சிங்கிடம் ஒப்படைத்தார். அஸ்ட்ரா எம்கே-1 ஏவுகணையை விமானப்படை தளபதி ஆர்.கே.எஸ்.பதாரியாவிடம் ஒப்படைத்தார். எல்லை கண்காணிப்பு சாதனத்தை ராணுவ தளபதி எம்.எம்.நரவனேவிடம் ஒப்படைத்தார். மேலும், சிறப்பாக செயல்பட்ட டி.ஆர்.டி.ஓ. விஞ்ஞானிகளுக்கு ராஜ்நாத்சிங் விருதுகள் வழங்கினார்.

Next Story