டெல்லியில் 2 மாடி கட்டிடம் இடிந்து விழுந்ததில் 4 பேர் பலி; 2 பேர் காயம்


Image :www.hindustantimes.com
x
Image :www.hindustantimes.com
தினத்தந்தி 19 Dec 2020 8:52 AM GMT (Updated: 2020-12-19T14:22:59+05:30)

மேற்கு டெல்லி பகுதியில் 2 மாடி கட்டிடம் இடிந்து விழுந்ததில் 4 பேர் பலியானார்கள்; 2 பேர் காயம் அடைந்தனர்.

புதுடெல்லி

மேற்கு டெல்லியின் விஷ்ணு கார்டன் பகுதியில்  இரண்டு மாடி  கொண்ட  கட்டிடத்தின் ஒரு பகுதி  இன்று காலை இடிந்து விழுந்ததில் 4 பேர் பலியானார்கள் மற்றும் இரண்டு பேர் காயமடைந்தனர் என்று தீயணைப்புத் துறை அதிகாரிகள் மற்றும் போலீசார் தெரிவித்தனர்.

கூடுதல் போலீஸ் கமிஷனர் (மேற்கு) சுபோத் குமார் கோஸ்வாமி கூறும் போது

சம்பவம் நடந்தபோது ஆறு பேர் தொழிற்சாலைக்குள் இருந்தனர். அவர்களை போலீஸ், ஆம்புலன்ஸ் மற்றும் டெல்லி பேரிடர் மேலாண்மை ஆணைய அதிகாரிகள் மீட்டனர். ஆறு பேரும் அருகிலுள்ள மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டனர். அவர்களில் 4 பேர் பரிசோதனைக்கு பிறகு இறந்ததாக மருத்துவர்கள் அறிவித்தனர். மற்ற இருவர் சிகிச்சை பெற்று வருகின்றனர் என கூறினார்.

Next Story