கேரளாவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 7 லட்சத்தை தாண்டியது


கேரளாவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 7 லட்சத்தை தாண்டியது
x
தினத்தந்தி 19 Dec 2020 10:48 PM IST (Updated: 19 Dec 2020 10:48 PM IST)
t-max-icont-min-icon

கேரளாவில் இதுவரை கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 7 லட்சத்து 158 ஆக உயர்ந்துள்ளது.

திருவனந்தபுரம், 

இந்தியாவில் கொரோனா தொற்று பரவல் சீரான வேகத்தில் குறைந்து வருகிறது. எனினும், கேரளா உள்ளிட்ட சில மாநிலங்களில் மட்டும் தொற்று பரவல் குறைந்த பாடில்லை. அந்த வகையில் கேரளாவில் இன்று  புதிதாக 6,293- பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.  

கேரளாவில் இதுவரை கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை  7 லட்சத்து 158 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்புக்கு மேலும் 29 பேர் பலியாகியுள்ளனர். இதைத் தொடர்ந்து, மொத்த பலி எண்ணிக்கை 2,786 ஆக உயர்ந்துள்ளது. தொற்று பாதிப்புடன்  60,396 பேர்  சிகிச்சை பெற்று வருகின்றனர். கடந்த 24 மணி நேரத்தில் 59,995 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டன. 

Next Story