விவசாய சீர்திருத்தம் பற்றியது: ‘இ-புத்தகம் படியுங்கள்’ மோடி வேண்டுகோள்


விவசாய சீர்திருத்தம் பற்றியது: ‘இ-புத்தகம் படியுங்கள்’ மோடி வேண்டுகோள்
x
தினத்தந்தி 20 Dec 2020 7:18 AM IST (Updated: 20 Dec 2020 7:18 AM IST)
t-max-icont-min-icon

டெல்லியின் எல்லைகளை முற்றுகையிட்டு விவசாயிகள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

புதுடெல்லி, 

சீர்திருத்தம் என்ற பெயரில் மத்திய அரசு கொண்டு வந்துள்ள 3 வேளாண் சட்டங்கள் தங்களுக்கு எதிரானவை என கருதி அவற்றை திரும்பப்பெற வலியுறுத்தி தலைநகர் டெல்லியின் எல்லைகளை முற்றுகையிட்டு விவசாயிகள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இதையொட்டி பிரதமர் மோடி நேற்று டுவிட்டரில் வெளியிட்ட பதிவில் கூறி இருப்பதாவது:-

சமீபத்தில் கொண்டு வரப்பட்டுள்ள விவசாய சீர்திருத்தங்கள் விவசாயிகளுக்கு எவ்வாறு உதவுகின்றன என்பதை விவரிக்கும் கிராபிக்ஸ் மற்றும் தகவல்கள் அடங்கிய இ-புத்தகம் வெளியிடப்பட்டுள்ளது. இதை நமோஆப் தன்னார்வ தொகுதியின் உங்கள் குரல் மற்றும் பதிவிறக்கங்கள் பிரிவுகளில் காணலாம். அவற்றை படித்து, பரந்த அளவில் பகிருங்கள்.

இவ்வாறு அதில் மோடி கூறி உள்ளார்.

Next Story