வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர்ந்து 25-வது நாளாக விவசாயிகள் போராட்டம்


வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர்ந்து 25-வது நாளாக விவசாயிகள் போராட்டம்
x
தினத்தந்தி 20 Dec 2020 10:50 AM IST (Updated: 20 Dec 2020 10:50 AM IST)
t-max-icont-min-icon

டெல்லியில் வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர்ந்து 25-வது நாளாக விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

புதுடெல்லி,

மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களால் குறைந்தபட்ச ஆதரவு விலை, மண்டி (சந்தைகள்) அமைப்பு போன்றவற்றுக்கு ஆபத்து உள்ளதாக கூறி விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக பஞ்சாப், அரியானா, உத்தரபிரதேசம் உள்ளிட்ட மாநில விவசாயிகள் டெல்லியில் 3 வாரங்களுக்கு மேலாக போராடி வருகின்றனர்.

இந்த விவசாயிகளுக்கு ஆதரவாக நாடு முழுவதும் பல்வேறு கட்சிகளும், அமைப்புகளும் போராட்டத்தில் குதித்துள்ளன. இதனால் வேளாண் சட்டங்கள் நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி இருக்கின்றன.

இந்நிலையில் தலைநகர் டெல்லியில் மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து குளிரையும் பொருட்படுத்தாமல் 25-வது நாளாக விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

டெல்லியில் நாளாக நாளாக குளிரின் வீரியம் அதிகரித்து வருகிறது. இவ்வாறு கடுமையான குளிர் வாட்டியபோதும் விவசாயிகளின் மன உறுதியில் எவ்வித மாற்றமும் ஏற்படவில்லை. வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கும் அவர்கள், தங்கள் போராட்டத்தை தீவிரப்படுத்தி வருகின்றனர். இதனால் டெல்லி எல்லைப்பகுதிகளில் பெரும் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது. 

Next Story