மராட்டியத்தில் இன்று மேலும் 3,811 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி
மராட்டியத்தில் இன்று புதிதாக 3 ஆயிரத்து 811 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது.
மும்பை,
மராட்டியத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. இதன்படி இன்று மாநிலத்தில் புதிதாக 3 ஆயிரத்து 811 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் இதுவரை நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 18 லட்சத்து 96 ஆயிரத்து 518 ஆக உயர்ந்து உள்ளது.
இன்று மாநிலத்தில் 2 ஆயிரத்து 064 பேர் வைரஸ் நோய் பாதிப்பில் இருந்து குணமாகினர். இதுவரை மொத்தம் 17 லட்சத்து 83 ஆயிரத்து 905 பேர் பாதிப்பில் இருந்து மீண்டு வந்து உள்ளனர். இதன்மூலம் குண்மடைவோர் விகிதம் 94.06 ஆக உயர்ந்துள்ளது. மாநிலத்தில் தற்போது 62 ஆயிரத்து 743 பேர் பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மாநிலத்தில் மேலும் 98 பேர் ஆட்கொல்லி நோய்க்கு பலியானார்கள். இதுவரை தொற்றுக்கு 48 ஆயிரத்து 746 பேர் உயிரிழந்து உள்ளனர்.
தலைநகர் மும்பையில் புதிதாக 586 பேருக்கு தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 2,86,850 ஆக உயர்ந்து உள்ளது. இதேபோல நகரில் மேலும் 16 பேர் பலியானதால் தொற்றுக்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10 ஆயிரத்து 996 ஆக அதிகரித்து உள்ளது.
Related Tags :
Next Story