இ-கோர்ட்டு திட்டத்துக்கு டிஜிட்டல் இந்தியா விருது


கோப்புப்படம்
x
கோப்புப்படம்
தினத்தந்தி 21 Dec 2020 1:52 AM IST (Updated: 21 Dec 2020 1:52 AM IST)
t-max-icont-min-icon

டிஜிட்டல் இந்தியா விருதுக்கு இ-கோர்ட்டு சேவைகள் திட்டம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

புதுடெல்லி, 

மத்திய அமைச்சகங்கள், மத்திய அரசு துறைகள் ஆகியவற்றில் சிறப்பான மின்னணு நிர்வாகத்துக்காக ‘டிஜிட்டல் இந்தியா’ விருது வழங்கப்படுகிறது. இந்த ஆண்டுக்கான இவ்விருதுக்கு ‘இ-கோர்ட்டு சேவைகள் திட்டம்’ தேர்வு செய்யப்பட்டுள்ளது.

மாவட்ட கோர்ட்டுகளை மின்னணு முறையில் இயங்கவைப்பதற்காக நீதித்துறையின் நிதி உதவியுடன் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. வருகிற 30-ந் தேதி இவ்விருது வழங்கும் விழா நடைபெறும் என்று தெரிகிறது.

Next Story