உத்தர பிரதேசத்தில் டீசல் லாரி மோதி கார் தீப்பிடித்ததில் 5 பேர் பலி


உத்தர பிரதேசத்தில் டீசல் லாரி மோதி கார் தீப்பிடித்ததில் 5 பேர் பலி
x
தினத்தந்தி 22 Dec 2020 11:29 PM GMT (Updated: 2020-12-23T04:59:24+05:30)

உத்தர பிரதேசத்தில் டீசல் லாரி மோதி கார் தீப்பிடித்து கொண்டதில் காரில் பயணித்த 5 பேர் பலியாகி உள்ளனர்.

ஆக்ரா,

உத்தரபிரதேச மாநிலம் ஆக்ராவில் யமுனா எக்ஸ்பிரஸ்வே சாலையில் ஒரு டேங்கர் லாரி டீசல் ஏற்றி சென்று கொண்டிருந்தது. திடீரென கட்டுப்பாட்டை இழந்த லாரி, லக்னோவில் இருந்து ஆக்ரா சென்று கொண்டிருந்த ஒரு கார் மீது மோதியது.

இந்த விபத்தில், கார் உடனே தீப்பிடித்து எரிய தொடங்கியது. இதில் காரில் இருந்தவர்கள் வெளியே வர முடியாமல் சிக்கிக்கொண்டனர்.

விபத்து பற்றி அறிந்ததும் தீயணைப்பு படையினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர். எனினும், காருக்குள் இருந்த 5 பேரும் கருகி பலியாகி விட்டனர். விபத்து ஏற்பட்டதும் லாரி டிரைவர் தப்பி ஓடிவிட்டார். அவரை போலீசார் தேடி வருகிறார்கள்.


Related Tags :
Next Story