பிரதமர் மோடி தலைமையில் இன்று மத்திய அமைச்சரவை கூட்டம்


பிரதமர் மோடி தலைமையில் இன்று மத்திய அமைச்சரவை கூட்டம்
x
தினத்தந்தி 23 Dec 2020 2:47 AM GMT (Updated: 23 Dec 2020 2:47 AM GMT)

பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இன்று மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெறுகிறது.

புதுடெல்லி,

மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி பஞ்சாப் மற்றும் அரியானா உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த விவசாயிகள் டெல்லி எல்லையில் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். அவர்களின் போராட்டம் இன்று 28-வது நாளை எட்டியுள்ளது. அவர்களுக்கு ஆதரவாக பல்வேறு மாநிலங்களிலும் விவசாய சங்கத்தினர் மற்றும் பல்வேறு அமைப்பினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்த பரபரப்பான சூழ்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இன்று மத்திய அமைச்சரவை கூட்டம் காணொலி காட்சி மூலம் நடைபெறுகிறது. மேலும் பொருளாதாரம் மற்றும் பாதுகாப்பு குழு கூட்டமும் இன்று நடைபெறுகிறது. 

இந்த கூட்டத்தில் வேளாண் சட்டங்களை கண்டித்து டெல்லியில் தொடர்ந்து நடைபெறும் விவசாயிகள் போராட்டம் மற்றும் முக்கிய விவகாரங்கள் குறித்து கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Next Story