வரைவு திட்டத்தில் மாற்றங்களைச் செய்ய அரசு தயார் என கூறும் மத்திய அரசு ; உறுதியான தீர்வைக் கோரும் விவசாயிகள்


வரைவு திட்டத்தில்  மாற்றங்களைச் செய்ய அரசு தயார் என கூறும்  மத்திய அரசு ; உறுதியான தீர்வைக் கோரும் விவசாயிகள்
x
தினத்தந்தி 23 Dec 2020 3:35 PM GMT (Updated: 23 Dec 2020 3:35 PM GMT)

வரைவு திட்டத்தில் மாற்றங்களைச் செய்ய அரசு தயார் என மத்திய அரசு தெரிவித்து உள்ளது. விவசாயிகள் உறுதியான தீர்வைக் கோருகின்றனர்

புதுடெல்லி:

புதிய வேளாண்  சட்டங்கள் குறித்த வரைவு திட்டத்தில் தேவையான மாற்றங்களைச் செய்ய அரசாங்கம் தயாராக இருப்பதாகவும், விவசாயிகளுடன் மீண்டும் பேச்சுவார்த்தை தொடங்கலாம் என்றும் மத்திய விவசாய அமைச்சர் நரேந்திர சிங் தோமர் இன்று தெரிவித்தார். மேலும் அடுத்த சுற்று பேச்சுவார்த்தைக்கு ஒரு தேதியையும் நேரத்தையும் நிர்ணயிக்குமாறு போராடும் தொழிற்சங்கங்களை  அவர் கேட்டு கொண்டார்.

இதற்கிடையில், மற்றொரு சுற்று பேச்சுவார்த்தைக்கு எழுத்துப்பூர்வமாக ஒரு உறுதியான தீர்வு  வந்தால் அரசாங்கத்துடன் பேசத் தயாராக இருப்பதாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட விவசாய சங்கங்கள் தெரிவித்தன. ஏற்கனவே நிராகரித்த புதிய சட்டங்களில் "அர்த்தமற்ற" திருத்தங்களை மீண்டும் செய்ய வேண்டாம் என்று விவசாயிகள் அரசாங்கத்திடம் கேட்டுக்கொண்டனர்.

விவசாயத் தலைவர் ஷிவ் குமார் தெரிவிக்கையில், சட்டங்களில் திருத்தங்கள் மேற்கொள்ளப்படாது என உள்துறை அமைச்சர் அமித் ஷாவிடம் நாங்கள் ஏற்கெனவே தெரிவித்துவிட்டோம். என கூறினார்.

ஸ்வராஜ் இந்தியா தலைவர் யோகேந்திர யாதவ் கூறும் போது அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த விவசாய சங்கங்கள் தயாராக உள்ளன. அரசு திறந்த மனதுடன் பேச்சுவார்த்தைக்கு வருவதற்காகவே அவர்கள் காத்திருக்கிறார்கள் என கூறினார்.

போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவர விவசாயிகளை சோர்வடைய வைக்க அரசு நினைக்கிறது என மற்றொரு விவசாயத் தலைவர் தெரிவித்தார்.


Next Story