புதியவகை வைரஸ் குறித்து கண்டறிய இந்தியா முழுவதும் ஆறு ஆய்வகங்கள் - இந்திய அறிவியல்-தொழில்துறை ஆராய்ச்சி கவுன்சில் தலைவர்

இங்கிலாந்தில் உள்ளது போல் கொரோனா வைரஸின் புதிய பிறழ்ந்த திரிபு இருப்பதைக் கண்டறிய இந்தியா முழுவதும் ஆறு ஆய்வகங்கள் மரபணு வரிசைமுறை சோதனைகளை நடத்த உள்ளன என இந்திய அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி கவுன்சிலின் தலைவர் கூறினார்.
புதுடெல்லி
புதிய கொரோனா வைரஸ் மாறுபாடு பற்றிய அச்சங்கள் குறித்து உரையாற்றிய இந்திய அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி கவுன்சிலின் தலைவர் டாக்டர் சேகர் மண்டே கொரோனா வைரஸ் பிறழ்வு குறித்து கண்டறிய 24 மணிநேரம் வரை தேவை என கூறினார்.
மேலும் அவர் கூறியதாவது:-
கொரோனா தடுப்பூசிகள் பரிசோதிக்கப்பட்டு உருவாக்கப்பட்டு அதற்கு எதிராக பயனுள்ளதாக இருக்க வேண்டும். கொரோனா வைரஸின் புதிய வகை பிறழ்ந்த திரிபு இருப்பதைக் கண்டறிய இந்தியா முழுவதும் ஆறு ஆய்வகங்கள் மரபணு வரிசைமுறை சோதனைகளை நடத்த உள்ளன.இங்கிலாந்திலிருந்து வந்த பயணிகள் கொரோனா பரிசோதனைக்கு பிறகு கொரோனா பாதித்தவர்களின் மாதிரிகள் இந்த ஆய்வகங்களுக்கு அனுப்பப்படுகின்றன.
டெல்லியில் உள்ள ஜெனோமிக்ஸ் நிறுவனம் மற்றும் ஐதராபாத்தில் உள்ள செல்லுலார் மற்றும் மூலக்கூறு உயிரியல் மையம் ஆகிய இந்த இரண்டு ஆய்வகங்கள் இந்திய அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி கவுன்சில் (சி.எஸ்.ஐ.ஆர்) கீழ் வருகின்றன.
ஆய்வகங்களுக்கு மாதிரிகளை அனுப்பும் செயல்முறை இன்னும் நடந்து கொண்டிருக்கிறது. இது தேசிய நோய்க் கட்டுப்பாட்டு மையத்தால் ஒருங்கிணைக்கப்பட்டு வருகிறது. இங்கிலாந்தின் திரிபு வைரஸ் இருப்பதைக் கண்டறிவது ஒரு நாளுக்குள் செய்யப்படலாம், ஏனெனில் இப்போதெல்லாம் வரிசைப்படுத்துவது வழக்கமான ஒன்றாகி விட்டது. இது அதிகபட்சமாக ஒரு நாள் அல்லது இரண்டு நாட்கள் ஆகும்.
தடுப்பூசிகள் வைரஸை மிகப் பெரிய வழியில் குறிவைக்கும் வகையில் தயாரிக்கப்படுகின்றன. பல பக்கங்களில் அவை இன்னும் நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்கும்.
கேரளாவின் பல்வேறு மாவட்டங்களில் காணப்படும் வைரஸ் மரபணு வரிசைமுறைகளை தொடர்ந்து ஆய்வு மேற்கொள்ளுமாறு கேரளா கேட்டுக் கொண்டுள்ளது. இந்த கண்காணிப்பு உத்திகள் பயனுள்ளதாக இருக்கும். அவை தனிநபர்களை விரைவாகக் கண்டறிந்து தனிமைப்படுத்த உதவுகின்றன, மேலும் தொற்று மேலும் பரவாமல் தடுக்கின்றன.
இங்கிலாந்தில் காணப்படும் கொரோனா வைரஸ் சில பிறழ்வுகள் தென்னாப்பிரிக்கா மற்றும் பிரேசில் போன்ற பிற நாடுகளிலும் காணப்படுகின்றன.தென்னாப்பிரிக்கா மற்றும் பிரேசிலில் உள்ளவை இங்கிலாந்திலிருந்து வந்தவையாக இல்லை. தன்னிட்சையாக மாறியவையாக இருந்தன. எனவே. இது இங்கிலாந்தில் மட்டும் நடக்கும் ஒரு நிகழ்வு அல்ல. இந்த பிறழ்வுகள் இந்தியாவிலும் இருகக்கூடும் எனக்கூறினார்.
Related Tags :
Next Story