ஒவ்வொரு நொடியும் ஒரு வாடிக்கையாளர்; ஆர்டர் செய்வதில் இந்தாண்டும் முதலிடம் பிடித்த சிக்கன் பிரியாணி!!


ஒவ்வொரு நொடியும் ஒரு வாடிக்கையாளர்;  ஆர்டர் செய்வதில் இந்தாண்டும் முதலிடம் பிடித்த சிக்கன் பிரியாணி!!
x
தினத்தந்தி 24 Dec 2020 4:45 PM GMT (Updated: 24 Dec 2020 4:45 PM GMT)

ஒவ்வொரு நொடியும் ஒரு வாடிக்கையாளர் ஆன்லைன் மூலம் ஆர்டர் செய்வதில் இந்தாண்டும் சிக்கன் பிரியாணி முதலிடம் பிடித்து உள்ளது.

புதுடெல்லி

2020 ஆம் ஆண்டில் கொரோனா தொற்றுநோய் நம் வாழ்வில் அழியாத மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. வீட்டிலிருந்து வேலை செய்வது அல்லது படிப்பது, ஆன்லைனில் எல்லாவற்றையும் ஆர்டர் செய்வது   'புதிய இயல்புக்கு' நாம் மாறி உள்ளோம். 

உணவுப் பழக்கவழக்கங்களும் சிறந்த அல்லது சில மோசமானவையாக இருந்தாலும், ஒரு பெரிய மாற்றத்திற்கு ஆளாகியுள்ளன. 

பெண்களும் வீடுகளில் சமையல் குறிப்புகளை பார்த்து விதவிதமாக சமைக்கிறார்கள். ஆனால் மாறாத ஒரு விஷயம் இந்தியர்களுக்கு பிரியாணி மீதான ஈர்ப்பு. 

ஸ்விக்கியின் 5-வது வருடாந்திர புள்ளிவிவர அறிக்கையின்படி, 2020 ஆம் ஆண்டில் ஒவ்வொரு நொடியும் ஒரு வாடிக்கையாளர் ஆர்டர் செய்வதில் இந்தாண்டும்  பிரியாணி முதலிடம் பிடித்து உள்ளது.

2020 ஆம் ஆண்டில் ஸ்விக்கியில் ஆர்டர் செய்யப்பட்ட முதல் ஐந்து உணவுகளில் பிரியாணி இரண்டு முறை இடம்பெற்றது. மட்டன் பிரியாணியை விட வாடிக்கையாளர்கள் சிக்கன் பிரியாணியை அதிகம் விரும்பி ஆர்டர் செய்து உள்ளனர்.  மக்கள் விரும்பி ஆர்டர் செய்த உணவுப் பட்டியலில் சிக்கன் பிரியாணி முதலிடத்தில் உள்ளது, மசாலா தோசை, பன்னீர் பட்டர்  மசாலா, சிக்கன் பிரைட் ரைஸ், மற்றும் மட்டன் பிரியாணி ஆகியவை தொடர்ந்து உள்ளன. 

சுவாரஸ்யமாக, சிக்கன் பிரியாணிக்கு ஆர்டர் செய்வதின்  மூலம் ஏராளமான வாடிக்கையாளர்கள்  புதிதாக அறிமுகமாகி உள்ளதாக  ஸ்விக்கி அறிக்கை கூறி உள்ளது.

மதிய உணவுக்குப் பிறகு டீ மற்றும் காபிக்கான ஆர்டர்கள் அதிகரித்திருப்பதாகவும் அந்த அறிக்கை குறிப்பிட்டுள்ளது, ஏனெனில் குறைந்தது 11 லட்சம் ஆர்டர்கள் செய்யப்பட்டு உள்ளன.  2020 ஆம் ஆண்டின் மற்றொரு மிகவும் விரும்பப்பட்ட தெரு உணவு பானி பூரி ஆகும், இது 2.4 லட்சம் முறை ஆர்டர் செய்யப்பட்டு உள்ளது.

மளிகைப் பொருள்களைப் பொறுத்தவரை, வெங்காயத்திற்கான தேவையை அதிகரித்தது - இது 2020 இன் கடைசி நான்கு மாதங்களில் 75,177 கிலோ எடையுள்ள வெங்காயத்திற்கு ஆர்டர்கள் வந்து உள்ளன. வாழைப்பழங்கள், டோன்ட் பால், உருளைக்கிழங்கு மற்றும் கொத்தமல்லி இலைகள் ஆகியவை பிற ஆர்டர் செய்யப்பட்ட பிரபலமான  பொருட்களில் அடங்கும் என அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.

Next Story