ஓரிரு வருடங்கள் சட்டங்களை அமல்படுத்தட்டும்; ஆதரவு இல்லை எனில் திருத்தம் மேற்கொள்வோம்: ராஜ்நாத் சிங் உறுதி


ஓரிரு வருடங்கள் சட்டங்களை அமல்படுத்தட்டும்; ஆதரவு இல்லை எனில் திருத்தம் மேற்கொள்வோம்:  ராஜ்நாத் சிங் உறுதி
x
தினத்தந்தி 25 Dec 2020 1:26 PM GMT (Updated: 2020-12-25T18:56:40+05:30)

வேளாண் சட்டங்களை ஓரிரு வருடங்கள் அமல்படுத்த விடுவோம் என்றும் விவசாயிகளுக்கு ஆதரவாக இல்லை எனில் அவற்றில் திருத்தங்கள் மேற்கொள்வோம் என்றும் மத்திய ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங் உறுதிப்பட பேசியுள்ளார்.

புதுடெல்லி,

டெல்லியில், மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து அரியானா, பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த விவசாயிகள் தொடர்ந்து பல வாரங்களாக போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.  அவர்களிடம் நடத்திய 5 சுற்று பேச்சுவார்த்தைகள் பலனற்று போனதுடன், 6வது சுற்று பேச்சுவார்த்தை ரத்து செய்யப்பட்டது.  இதனால், வேளாண் சட்டங்களில் திருத்தங்களை மேற்கொள்ள அரசு முன்வந்தது.

ஆனால், விவசாயிகள் அதனை ஏற்க மறுத்து விட்டனர்.  சட்டங்களை வாபஸ் பெற வேண்டும் என்று அரசை அவர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.  இந்நிலையில், மத்திய ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங் இன்று நடந்த கூட்டமொன்றில் கலந்து கொண்டு பேசும்பொழுது, வேளாண் சட்டங்களை ஒன்று அல்லது இரண்டு வருடங்கள் வரை அரசு அமல்படுத்த விடுவோம்.

அதன்பின்னர், இந்த சட்டங்கள் விவசாயிகளுக்கு ஆதரவாக இல்லை என நீங்கள் எண்ணுவீர்கள் என்றால், நம்முடைய பிரதமரின் நோக்கம் பற்றி நன்றாக அறிந்த வகையில் நான் உங்களுக்கு உறுதி கூறுகிறேன்.  இந்த சட்டங்களில், தேவையான அனைத்து திருத்தங்களையும் நாங்கள் மேற்கொள்வோம் என்று பேசியுள்ளார்.

Next Story