வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு அரியானாவில் சுங்கச்சாவடிகளை முடக்கிய விவசாயிகள்


கோப்பு படம்
x
கோப்பு படம்
தினத்தந்தி 26 Dec 2020 4:13 AM IST (Updated: 26 Dec 2020 4:13 AM IST)
t-max-icont-min-icon

விவசாயிகள் மாநிலம் முழுவதும் நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகளை முற்றுகையிட்டு சுங்க கட்டணம் வசூலிப்பதை தடுத்து நிறுத்தினார்கள்

சண்டிகார், 

மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் விவசாயிகள் தொடர்ந்து போராடி வரும் நிலையில், வேளாண் சட்டங்களை எதிர்த்து அரியானாவில் 25-ந்தேதி முதல் (நேற்று) 27-ந்தேதி வரை 3 நாட்கள் சுங்கச்சாவடிகளில் வாகன ஓட்டிகளிடம் கட்டணம் வசூலிக்க அனுமதிக்காமல் சுங்கச்சாவடிகளன் செயல்பாட்டை விவசாயிகள் முடக்குவார்கள் என பாரதிய கி‌ஷான் யூனியன் அமைப்பு அறிவித்து இருந்தது.

அதன்படி நேற்று அதிகாலை முதலே விவசாயிகள் மாநிலம் முழுவதும் நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகளை முற்றுகையிட்டு சுங்க கட்டணம் வசூலிப்பதை தடுத்து நிறுத்தினார்கள்.

அவர்கள் வாகன ஓட்டிகளை சுங்க கட்டணம் செலுத்தாமல் செல்ல செய்தனர். விவசாயிகளின் இந்த போராட்டத்தின் காரணமாக பல இடங்களில் சுங்கச்சாவடி ஊழியர்கள் தாங்களாகவே சுங்க கட்டணம் வசூலிப்பதை நிறுத்தி கொண்டனர்.

1 More update

Next Story