வேளாண் சட்டம் தொடர்பாக, விவசாயிகளுடனான 11வது கட்ட பேச்சுவார்த்தையும் தோல்வி


வேளாண் சட்டம் தொடர்பாக, விவசாயிகளுடனான 11வது கட்ட பேச்சுவார்த்தையும் தோல்வி
x
தினத்தந்தி 22 Jan 2021 12:04 PM GMT (Updated: 22 Jan 2021 12:04 PM GMT)

டெல்லியில் வேளாண் சட்டம் தொடர்பாக, விவசாயிகளுடனான 11வது கட்ட பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிந்தது.

புதுடெல்லி,

வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராட்டம் நடத்தி வரும் விவசாய அமைப்புகளுடன் மத்திய அரசு பல சுற்றுகளாக பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

நேற்றுமுன்தினம் 10-வது சுற்று பேச்சுவார்த்தை நடந்தது. அதில், வேளாண் சட்டங்களை 18 மாதங்களுக்கு நிறுத்தி வைப்பதாகவும், சுமுக தீர்வு காண ஒரு கூட்டுக்குழுவை அமைப்பதாகவும் ஒரு திட்டத்தை மத்திய அரசு முன்வைத்தது.

18 மாதங்களுக்கு வேளாண் சட்டங்களை அமல்படுத்தாமல் நிறுத்தி வைக்க மத்திய அரசு ஒப்புக் கொண்ட போதும் அவற்றை அடியோடு ரத்து செய்ய வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்தி வருகின்றனர்.

இந்தநிலையில் நேற்று மத்திய மந்திரி அமித் ஷாவை அவருடைய இல்லத்தில் சந்தித்த வேளாண்துறை மந்திரி நரேந்திர சிங் தோமர் சுமார் ஒருமணி நேரம் ஆலோசனை நடத்தினார்.

இந்நிலையில் இன்று டெல்லியில் உள்ள விக்யான் பவனில் மத்திய அரசு மற்றும் விவசாயிகள் சங்கங்கள் தரப்பில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்த பேச்சுவார்த்தையில் விவசாய அமைப்புகளின் தலைவர்கள் ,மத்திய மந்திரிகள் நரேந்தர் சிங் தோமர்,பியூஸ் கோயல் உள்ளிட்டோர் பங்கேற்றனர். 

வேளாண் சட்டம் தொடர்பாக, விவசாயிகளுடனான 11-வது கட்ட பேச்சுவார்த்தையில் எந்த ஒரு இறுதி முடிவும் எட்டப்படாமல் தோல்வி அடைந்தது. கூட்டத்தில் எந்த முடிவும் எடுக்கப்படாமல், பேச்சுவார்த்தை நிறைவு பெற்றது.  புதிய வேளாண் சட்டங்களை திரும்ப பெற வேண்டும் என விவசாய சங்கங்கள் தரப்பில் மீண்டும் வலியுறுத்தப்பட்டது.

இதனையடுத்து  3 வேளாண் சட்டங்கள் தொடர்பாக விவசாயிகள் சங்கங்களுக்கும் மத்திய அரசிற்கும் இடையிலான நடைபெற்ற 11-வது கட்ட பேச்சுவார்த்தை முடிவடைந்தது. அடுத்த கூட்டத்திற்கான தேதி எதுவும் அரசு நிர்ணயிக்கவில்லை என்று (பஞ்சாப்) விவசாய சங்க மாநில தலைவர்களில் ஒருவரான சுர்ஜீத் சிங் புல் தெரிவித்துள்ளார்.

Next Story