விவசாயிகள் நடத்தும் டிராக்டர் பேரணியை சீர்குலைக்க சதி ; விவசாய சங்க தலைவர்களை சுட்டுக் கொல்ல திட்டம் , ஒருவர் கைது


படம்:  ANI
x
படம்: ANI
தினத்தந்தி 23 Jan 2021 9:27 AM GMT (Updated: 23 Jan 2021 9:27 AM GMT)

விவசாயிகள் நடத்தும் டிராக்டர் பேரணியை சீர்குலைக்க சதி திட்டம் ; விவசாய சங்க தலைவர்களை சுட்டுக் கொல்ல முயற்சி நடப்பதாக விவ்சாய சங்க தலைவர்கள் கூறி உள்ளனர்.

புதுடெல்லி

வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறக் கோரி கடந்த 50 நாட்களுக்கும் மேலாக விவசாயிகள் டெல்லி எல்லையில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்தப் போராட்டத்தில் இதுவரை 140க்கும் மேற்பட்ட விவசாயிகள் உயிரிழந்துள்ளனர். 10 சுற்றுப் பேச்சுவார்த்தை நடத்தியும் வேளாண் சட்டங்கள் குறித்து விவசாயிகளுக்கும் மத்திய அரசுக்கும் இடையே உறுதியான எந்த முடிவும் எட்டப்படவில்லை.

நேற்றுமுன்தினம் 10-வது சுற்று பேச்சுவார்த்தை நடந்தது. அதில், வேளாண் சட்டங்களை 18 மாதங்களுக்கு நிறுத்தி வைப்பதாகவும், சுமுக தீர்வு காண ஒரு கூட்டுக்குழுவை அமைப்பதாகவும் ஒரு திட்டத்தை மத்திய அரசு முன்வைத்தது.

18 மாதங்களுக்கு வேளாண் சட்டங்களை அமல்படுத்தாமல் நிறுத்தி வைக்க மத்திய அரசு ஒப்புக் கொண்ட போதும் அவற்றை அடியோடு ரத்து செய்ய வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில்  வேளாண் சட்டங்கள் தொடர்பான விவகாரத்தில் மத்திய அரசுக்கும், விவசாயிகள் சங்கத்தினருக்கும் இடையே நேற்று நடந்த 11-வது சுற்றுப் பேச்சுவார்த்தையிம் தோல்வியில் முடிந்தது. 

டெல்லி-அரியானா எல்லையில்  சிங்கூர் என்னுமிடத்தில் விவசாயிகள் மத்திய அரசின் வேளாண் சட்டங்களைத் திரும்பப்பெற வலியுறுத்தி இன்று 59 வது நாளாகப் போராட்டம் நடத்தி வருகின்றனர். 

அங்கு  இளைஞர் ஒருவரைப் பிடித்து விவசாயிகள் போலீசாரிடம் ஒப்படைத்தனர். அந்த இளைஞனிடம் நடத்திய விசாரணையில் விவசாய தலைவர்களைக் கொல்ல திட்டமிட்டதாக ஒப்புக் கொண்டார். விவசாயிகளின் போராட்டத்தில் குழப்பத்தை ஏற்படுத்த முயற்சி செய்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

தன்முடன் இதுபோல் பத்து பேர் விவசாயிகள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தி கலவரத்தைத் தூண்ட முயற்சிப்பதாகவும் அவர் போலீசாரிடம் தெரிவித்துள்ளார்.

24 ஆம் தேதி, நான்கு பேரை மேடையில் சுட்டுக் கொல்லும் திட்டம் உள்ளது. எங்களுக்கு பிரதீப் சிங் பயிற்சி அளித்தார் .அவர் ஸ்டேஷன் ஹவுஸ் அதிகாரி அவர் எங்களைச் சந்திக்க வரும்போதெல்லாம்  முகமூடி அணிந்து இருப்பார் என அந்த  நபர் குற்றம் சாட்டி  உள்ளார்.

Next Story