மார்ச் அல்லது ஏப்ரல் மாதத்திற்குள் பழைய ரூ.100 நோட்டுக்கள் திரும்ப பெறப்படும் - ரிசர்வ் வங்கி


மார்ச் அல்லது ஏப்ரல் மாதத்திற்குள் பழைய ரூ.100 நோட்டுக்கள் திரும்ப பெறப்படும் - ரிசர்வ் வங்கி
x
தினத்தந்தி 23 Jan 2021 10:18 AM GMT (Updated: 23 Jan 2021 10:18 AM GMT)

மார்ச் அல்லது ஏப்ரல் மாதத்திற்குள் பழைய ரூ.100 நோட்டுக்கள் திரும்ப பெறப்படும் என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

மங்களூரு,

மார்ச் அல்லது ஏப்ரல் மாதத்திற்குள் பழைய ரூ.5, ரூ.10,ரூ.100 நோட்டுகள் திரும்ப பெறப்படும் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. மங்களூருவில் மாவட்ட வங்கிகள் இடையேயான ஆலோசனை கூட்டத்தில் ரிசர்வ் வங்கி உதவி பொது மேலாளர் மகேஷ் பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது:-

பழைய ரூ.5, ரூ.10,ரூ.100 நோட்டுகள் பெறப்பட்டு புதிய ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் விடப்படும் என தெரிவித்தார். பணமதிப்பிழப்புக்கு பிறகு 2019-ல் அறிமுகப்படுத்தப்பட்ட ஊதா நிற ரூ.100 நோட்டுகளை திரும்ப பெற முடிவு செய்யப்பட்டுள்ளது என்றார்.

ரூ.10 நாணயம் அறிமுகப்படுத்தப்பட்டு 15 ஆண்டுகளுக்குப் பிறகும், வர்த்தகர்கள் மற்றும் வணிகஸ்தர்கள் அந்த நாணயங்களை ஏற்கவில்லை, இது வங்கிகளுக்கும் ரிசர்வ் வங்கிக்கும் ஒரு பிரச்சினையாக மாறியுள்ளது என்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.

Next Story