இந்தியாவில் 16 லட்சம் சுகாதார பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது - சுகாதாரத்துறை அமைச்சகம்


இந்தியாவில் 16 லட்சம் சுகாதார பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது - சுகாதாரத்துறை அமைச்சகம்
x
தினத்தந்தி 24 Jan 2021 5:09 PM GMT (Updated: 24 Jan 2021 5:09 PM GMT)

இந்தியாவில் இதுவரை 16 லட்சம் சுகாதார பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

புதுடெல்லி,

இந்தியா முழுவதும் கோவிஷீல்டு மற்றும் கோவாக்சின் ஆகிய இரண்டு தடுப்பூசிகளும் கடந்த 16-ம் தேதி முதல் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டது. கொரோனா தடுப்பூசி திட்ட பணிகளை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். முதல்கட்டமாக சுகாதார பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.  

இந்நிலையில், தடுப்பூசி செலுத்தும்பணிகள் தொடங்கப்பட்டு இன்று 9-வது நாளை எட்டியுள்ள நிலையில் நாடு முழுவதும் இதுவரை மொத்தம் எத்தனை பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என்ற தகவலை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அவ்வ போது வெளியிட்டு வருகிறது. 

அதன்படி, நாடு முழுவதும் சுகாதார பணியாளர்கள் 16 லட்சத்து 13 ஆயிரத்து 667 பேருக்கு இதுவரை கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. அவற்றில் தமிழகத்தில் இதுவரை 61 ஆயிரத்து 720 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

குறிப்பாக, இன்று மட்டும் மாலை 7.30 மணி நிலவரப்படி,  நாடு முழுவதும் 31 ஆயிரத்து 466 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.  

அவற்றில் அதிகபட்சமாக ராஜஸ்தானில் 24 ஆயிரத்து 586 பேருக்கும், கர்நாடகாவில் 2 ஆயிரத்து 472 பேருக்கும், தமிழகத்தில் 2 ஆயிரத்து 494 பேருக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story