டெல்லி விவசாயிகள் போராட்டத்தில் தமிழக விவசாயிகள் பங்கேற்பு

டெல்லி விவசாயிகள் போராட்டத்தில் தமிழக விவசாயிகள் பங்கேற்றனர்.
புதுடெல்லி,
மத்திய அரசின் வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லி எல்லை பகுதியில் விவசாயிகள் குடியரசு தினமான நாளை (செவ்வாய்க்கிழமை) டிராக்டர் பேரணி நடத்த முடிவு செய்துள்ளனர். இதில் பங்கேற்று ஆதரவு தெரிவிப்பதற்காக தமிழக அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்புக்குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் தலைமையில் தமிழக விவசாயிகள் நேற்று டெல்லி வந்தனர்.
போராட்டக்களத்துக்கு சென்று ஆதரவு தெரிவித்த அவர்கள் பேரணியில் பங்கேற்பதற்காக அணிவகுத்து வந்த டிராக்டர்கள் வரவேற்பு நிகழ்ச்சியிலும் பங்கேற்றனர்.
இதில் மாவட்டச் செயலாளர்கள் குடவாசல் சரவணன் (திருவாரூர்), மேலூர் அருண் (மதுரை), செய்தி தொடர்பாளர் மணிமாறன் மற்றும் நிர்வாகிகள் சுதா தர்மலிங்கம், தவமணி, நாகை சபா, கணேசன் உள்ளிட்டோர் போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.
Related Tags :
Next Story






