வருகிற 1-ம்தேதி முதல் வழக்கமான ரெயில் சேவை தொடங்குமா..? ரெயில்வே அதிகாரிகள் விளக்கம்


வருகிற 1-ம்தேதி முதல் வழக்கமான ரெயில் சேவை தொடங்குமா..? ரெயில்வே அதிகாரிகள் விளக்கம்
x
தினத்தந்தி 25 Jan 2021 8:11 AM IST (Updated: 25 Jan 2021 8:11 AM IST)
t-max-icont-min-icon

வருகிற 1-ம்தேதி முதல் வழக்கமான ரெயில் சேவை தொடங்குமா..? என்பது குறித்து ரெயில்வே அதிகாரிகள் விளக்கம் அளித்து உள்ளனர்.

சென்னை

வருகிற ஒன்றாம் தேதி முதல் வழக்கமான ரெயில் சேவை தொடங்கப்படுவதாக கூறப்படும் தகவல்களை நம்ப வேண்டாம் என ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ரெயில்வேத்துறை அறிவித்து இருப்பது போன்ற செய்தி சமூக வலைதளங்களில் பரவி வருவதற்கு உண்மையல்ல எனவும் விளக்கம் அளித்துள்ளனர்.

அரசின் சம்பந்தப்பட்ட அனைத்து துறைகளிடமும் கலந்து ஆலோசனை செய்த பின்னரே வழக்கமான ரெயில் சேவை தொடங்கப்படும் என்றும், சமூக வலைதங்களில் வரும் உண்மையற்ற செய்திகளை நம்ப வேண்டாம் எனவும் அவர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.
1 More update

Next Story