குடியரசு தினம்: மின்விளக்குகளால் ஜொலித்த மும்பை பி.எம்.சி கட்டிடம்


குடியரசு தினம்: மின்விளக்குகளால் ஜொலித்த மும்பை பி.எம்.சி கட்டிடம்
x
தினத்தந்தி 25 Jan 2021 6:50 PM GMT (Updated: 25 Jan 2021 6:50 PM GMT)

நாடு முழுவதும் இன்று குடியரசு தினத்தையொட்டி மும்பை பி.எம்.சி கட்டிடம் மூவர்ண விளக்குகளால் ஜொலித்தது.

மும்பை,

இந்தியாவின் அரசியல் அமைப்பு சாசனம் அமலுக்கு வந்த தினமான ஜனவரி 26-ந் தேதி, குடியரசு தின விழாவாக நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது.

அந்த வகையில் குடியரசு தின விழா இன்று (செவ்வாய்க்கிழமை) நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி அசம்பாவித சம்பவங்கள் நிகழாமல் தடுக்க நாடு முழுவதும் போலீசார் உஷார்படுத்தப்பட்டு உள்ளனர்.

இந்த நிலையில் குடியரசு தினத்தையொட்டி மும்பையில் உள்ள பி.எம்.சி கட்டிடம் மற்றும் மும்பை சத்ரபதி சிவாஜி டெர்மினஸ் ரெயில் நிலையம் மூவர்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு உள்ளன. இதனால் இரவிலும் கட்டிடங்கள் ஒளி வெள்ளத்தில் பளிச்சிடுகின்றன.மின் விளக்குகளால் கட்டிடம் மிண்ணுவது காண்பேரை கவர்ந்து இழுக்கும் காட்சியாக உள்ளது. மும்பை ரெயில் நிலையமும் ஒளி வெள்ளத்தில் மிதக்கிறது.

Next Story