தேசிய நலனை கருத்தில் கொண்டு வேளாண் சட்டங்களை திரும்பப்பெறுங்கள: ராகுல் காந்தி


தேசிய நலனை கருத்தில் கொண்டு வேளாண் சட்டங்களை திரும்பப்பெறுங்கள: ராகுல் காந்தி
x
தினத்தந்தி 26 Jan 2021 6:19 PM GMT (Updated: 26 Jan 2021 8:30 PM GMT)

எந்த பிரச்சினைக்கும் வன்முறை தீர்வு ஆகாது என்று காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி, 

டெல்லியில் விவசாயிகள் நடத்திய பேரணியில் இன்று வன்முறை ஏற்பட்டது. அனுமதிக்கப்பட்ட இடத்திற்கு பதிலாக மாற்று வழியில் அதாவது டெல்லியின் லூட்யென்ஸ் பகுதிக்குள் விவசாயிகள்  நுழைய  முற்பட்டனர்.   இதனால், போலீசாருடன் மோதல் ஏற்பட்டது. இது குறித்து காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி டுவிட்டரில் கருத்து தெரிவித்தார்.

அதில் அவர், “எந்த ஒரு பிரச்சினைக்கும் வன்முறை தீர்வு ஆகாது. யாராவது ஒருவர் காயம் அடைந்தாலும், பாதிப்பு நமது நாட்டுக்குத்தான். தேசிய நலனை கருத்தில் கொண்டு வேளாண் சட்டங்களை திரும்பப்பெறுங்கள” என கூறி உள்ளார்.


Next Story