2021-22 ஆண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சி 11 % எட்டும் பொருளாதார ஆய்வறிக்கை


படம்:  ANI
x
படம்: ANI
தினத்தந்தி 29 Jan 2021 11:13 AM GMT (Updated: 30 Jan 2021 5:56 AM GMT)

பொருளாதார ஆய்வறிக்கையில் 2021-22 ஆண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சி 11 சதவீதத்தை எட்டும் என கூறப்பட்டு உள்ளது.

புதுடெல்லி

மக்களவையை தொடந்ர்து இன்று பிற்பகல்   மாநிலங்களவையில் 2020-2021ம் ஆண்டுக்கான  பொருளாதார ஆய்வறிக்கையை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். பின்னர் பிப்ரவரி 1ஆம் தேதி வரை மாநிலங்களவை ஒத்திவைக்கப்பட்டது.

பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த அறிக்கை, கடந்த நிதியாண்டில் இந்தியப் பொருளாதாரத்தில் ஏற்பட்ட முன்னேற்றங்களை மதிப்பாய்வு செய்கிறது. இது  2 தொகுதிகளாக வெளியிடப்பட்டு உள்ளது.  புள்ளிவிவர பின் இணைப்பு ஆகியவற்றைக் கொண்டுள்ளது. 

பாராளுமன்றத்தில் 2021 பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அட்டவணைப்படுத்துவதற்கு மூன்று நாட்களுக்கு முன்னர், பொருளாதார கணக்கெடுப்பு 2021 ஐ வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது, பொருளாதார கணக்கெடுப்பு பொருளாதார விவகாரங்கள் துறையின் பொருளாதார பிரிவால் தயாரிக்கப்படுகிறது, இதில்  தலைமை பொருளாதார ஆலோசகர்  சுப்பிரமணியன் மற்றும் அவரது குழுவும் அடங்கும்.

மத்திய பட்ஜெட்டுக்கு களம் அமைக்கும் பொருளாதார கணக்கெடுப்பு 2021-ஐ ஜனவரி 29 அன்று அரசாங்கம் முன்வைக்கும். அரசாங்கத்தின் தலைமை பொருளாதார ஆலோசகர் கே.வி சுப்ரமணியன் இந்த அறிக்கையின் முக்கிய பொறுப்பாளர் ஆவார், இது பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் தாக்கல் செய்யப்பட்டு முந்தைய நிதியாண்டில் இந்திய பொருளாதாரத்தின் முக்கிய கூறுகளை மதிப்பாய்வு செய்கிறது.

கொரோனா வைரஸ் ஊரடங்கால்  பாதிக்கப்பட்டுள்ள பொருளாதாரம், 2021-22 நிதியாண்டில் வலுவான மீட்சியைக் காணும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) ஏப்ரல்-ஜூன் மாதங்களில் 23.9 சதவீதமாகவும், இரண்டாவது காலாண்டில் 7.5 சதவீதமாகவும்  சரிவடைந்தது.

முழு நிதியாண்டில், 7.7 சதவீதம் அடுத்த நிதியாண்டில்  வி வடிவ மீட்பு ஆகியவற்றை  பொருளாதார ஆய்வறிக்கை கணித்து உள்ளது.மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சி 2021-22 நிதியாண்டில் (ஏப்ரல் 2021 முதல் மார்ச் 2022 வரை) 11 சதவீதம் விரிவடைந்து காணப்படும் என கூறப்பட்டு உள்ளது.

Next Story