பட்ஜெட் மக்களின் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப இருக்கும்; மத்திய நிதி இணை மந்திரி பேட்டி
பட்ஜெட் மக்களின் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப இருக்கும் என மத்திய நிதி இணை மந்திரி அனுராக் தாகூர் அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.
புதுடெல்லி,
நடப்பு 2021-22 நிதி ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிதி மந்திரி நிர்மலா சீதாராமன், நாடாளுமன்ற மக்களவையில் இன்று காலை 11 மணிக்கு தாக்கல் செய்கிறார். இந்த பட்ஜெட் காகிதமில்லா பட்ஜெட் ஆகும். பட்ஜெட்டின் அங்கீகரிக்கப்பட்ட பிரதி மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டு, உடனே இணையத்தில் வெளியிடப்படுகிறது.
பட்ஜெட் தாக்கலை முன்னிட்டு மத்திய நிதி இணை மந்திரி அனுராக் தாகூர் தனது இல்லத்தில் பூஜை, ஆரத்தி எடுத்து இறைவழிபாட்டில் ஈடுபட்டார். இதன்பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பட்ஜெட் மக்களின் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப இருக்கும். இந்த அரசு மக்களின் அரசாக, வளர்ச்சிக்கான அரசாக செயல்படுகிறது என கூறியுள்ளார்.
கொரோனா பெருந்தொற்று காலத்தில் ஆத்மநிர்பார் தொகுப்புகளை அறிவித்து, பின்னடைவில் இருந்து பொருளாதாரம் மீண்டு, விரைவில் பழைய நிலைக்கு திரும்புவதற்கான நடவடிக்கைகளை அரசு எடுத்து இந்தியாவுக்கு புதிய வழியை வழங்கி வருகிறது என்று கூறியுள்ளார். இதன்பின் மத்திய நிதி அமைச்சகத்திற்கு அவர் புறப்பட்டு சென்றார்.
Related Tags :
Next Story