பட்ஜெட் தாக்கல்: ஜனாதிபதியுடன் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் சந்திப்பு


பட்ஜெட் தாக்கல்: ஜனாதிபதியுடன் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் சந்திப்பு
x
தினத்தந்தி 1 Feb 2021 10:05 AM IST (Updated: 1 Feb 2021 10:16 AM IST)
t-max-icont-min-icon

டிஜிட்டல் வடிவிலான பட்ஜெட் அடங்கிய பெட்டகத்துடன் ஜனாதிபதியை நிர்மலா சீதாராமன் உள்ளிட்டோர் சந்தித்தனர்.

புதுடெல்லி,

நடப்பு 2021-22 நிதி ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிதி மந்திரி நிர்மலா சீதாராமன், நாடாளுமன்ற மக்களவையில் இன்று காலை 11 மணிக்கு தாக்கல் செய்கிறார். இந்த பட்ஜெட் காகிதமில்லா பட்ஜெட் ஆகும். பட்ஜெட்டின் அங்கீகரிக்கப்பட்ட பிரதி மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டு, உடனே இணையத்தில் வெளியிடப்படுகிறது.

பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் சந்தித்தார்.  டிஜிட்டல் வடிவிலான பட்ஜெட் அடங்கிய பெட்டகத்துடன் ஜனாதிபதியை நிர்மலா சீதாராமன் உள்ளிட்டோர் சந்தித்தனர். 


Next Story