தமிழகத்தில் ரூ.1.03 லட்சம் கோடி செலவில் 3,500 கி.மீ சாலைகள் அமைக்கப்படும் - நிர்மலா சீதாராமன்


தமிழகத்தில் ரூ.1.03 லட்சம் கோடி செலவில் 3,500 கி.மீ சாலைகள் அமைக்கப்படும் - நிர்மலா சீதாராமன்
x
தினத்தந்தி 1 Feb 2021 11:59 AM IST (Updated: 1 Feb 2021 12:04 PM IST)
t-max-icont-min-icon

நாட்டில் மாசுபாட்டை தவிர்க்க நகர்புற தூய்மை இந்தியா திட்டம் 2.0 அறிமுகம் செய்யப்படும் என நிதி அமைச்சர் தெரிவித்தார்.

புதுடெல்லி,

நடப்பு 2021-22 நிதி ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிதி மந்திரி நிர்மலா சீதாராமன், நாடாளுமன்ற மக்களவையில் இன்று காலை 11 மணிக்கு தாக்கல்  செய்தார். அதன் முக்கிய அம்சங்கள் வருமாறு:

நாடு முழுவதும் 13 ஆயிரம் கிலோ மீட்டர் தொலைவுக்கு சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
மேலும் 11,500 கிலோ மீட்டர் தொலைவுக்கு சாலை அமைக்கும் பணிகள் தொடங்கும். ரூ.1.03 லட்சம் கோடியில் தமிழகத்தில் 35,000 கிலோ மீட்டர் தொலைவுக்கு சாலை அமைக்கும் பணிகள் நடைபெறுகின்றன.தமிழகம் மற்றும் கேரளத்தை இணைக்கும் வகையில் சாலை வசதிகளை ஏற்படுத்த மத்திய பட்ஜெட்டில் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

தனியார் வாகனம் 20 ஆண்டுகளும், வாடகைக்கு இயக்கப்படும் கமர்ஷியல் வாகனங்கள 15 ஆண்டுகள் வரை மட்டுமே பயன்பாட்டில் இருக்க நடவடிக்கை எடுக்கப்படும். நாட்டில் மாசுபாட்டை தவிர்க்க நகர்புற தூய்மை இந்தியா திட்டம் 2.0 அறிமுகம். நகர்புற பகுதிகளில் ஜல் ஜீவன் திட்டம் செயல்படுத்தப்படும்” என்றார். 


Next Story