இந்தியாவின் வளர்ச்சிக்கு 6 முக்கிய துறைகள் தூண்களாக கவனிக்கப்படும்: மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன்


இந்தியாவின் வளர்ச்சிக்கு 6 முக்கிய துறைகள் தூண்களாக கவனிக்கப்படும்:  மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன்
x
தினத்தந்தி 1 Feb 2021 12:28 PM IST (Updated: 1 Feb 2021 12:28 PM IST)
t-max-icont-min-icon

இந்தியாவின் வளர்ச்சிக்கு 6 முக்கிய துறைகள் தூண்களாக கவனிக்கப்படும் என மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.

புதுடெல்லி,

நாடாளுமன்ற மக்களவையில், நடப்பு 2021-22 நிதி ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் இன்று காலை 11 மணிக்கு தாக்கல் செய்து பேசி வருகிறார். இந்த பட்ஜெட் காகிதமில்லா பட்ஜெட் ஆகும். பட்ஜெட்டின் அங்கீகரிக்கப்பட்ட பிரதி மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டு, உடனே இணையத்தில் வெளியிடப்படுகிறது.

பட்ஜெட் தாக்கலை முன்னிட்டு டெல்லியில் மத்திய மந்திரிசபை கூட்டம் இன்று காலை நடந்தது.  இதில், நாடாளுமன்றத்தில் 2021-22ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்வதற்கான ஒப்புதலை மத்திய மந்திரிசபை வழங்கியது.  இதனை தொடர்ந்து மத்திய மந்திரி நாடாளுமன்றத்தில் பட்ஜெட் தாக்கல் செய்து பேசி வருகிறார்.

அவர் பேசும்பொழுது, இந்தியாவின் வளர்ச்சிக்கு 6 முக்கிய துறைகள் தூண்களாக கவனிக்கப்படும் என கூறியுள்ளார்.  அவை,

* சுகாதாரம் மற்றும் நல்வாழ்வு

* நிதி மூலதனம் மற்றும் உள்கட்டமைப்பு

* வளர்ச்சிக்கான நோக்கங்களை கொண்ட இந்தியா

* மனித மூலதனத்திற்கு புத்துயிரூட்டுதல்

* புதிய கண்டுபிடிப்புகள், ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு

* குறைந்தபட்ச அரசு மற்றும் அதிகபட்ச நிர்வாகம் என்று அவர் கூறியுள்ளார்.
1 More update

Next Story