சுவர்களை உருவாக்காமல், பாலங்களை உருவாக்குங்கள் - ராகுல்காந்தி வலியுறுத்தல்
சுவர்களை உருவாக்காமல் பாலங்களை உருவாக்குங்கள் என்று மத்திய அரசை ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார்.
புதுடெல்லி,
வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக டெல்லி எல்லையில் விவசாயிகள் போராடி வருகின்றனர். கடந்த ஜனவரி 26- குடியரசு தினத்தன்று விவசாயிகள் நடத்திய டிராக்டர் பேரணியில் வன்முறை ஏற்பட்டது.
இதையடுத்து, காசிப்பூர் எல்லை, சிங்கு, திக்ரி பகுதிகளில் இருந்து டெல்லிக்குள் நுழையும் விவசாயிகளைத் தடுக்க சிமெண்ட் தடுப்புகள், கான்க்ரீட் தடுப்புகள், இரும்பு பேரிகார்டுகள், முள்வேலிகள் அமைக்கப்பட்டு வருகிறது. இதற்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இது குறித்து காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி தனது டுவிட்டரில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், சுவர்களை கட்டாதீர்கள்; பாலங்களைக் கட்டுங்கள்"எனத் தெரிவித்துள்ளா
Related Tags :
Next Story