போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி கடந்தாண்டு 5,133 முறை அத்துமீறிய பாகிஸ்தான்
ஜம்மு - காஷ்மீரில் போர் ஒப்பந்த நிறுத்த ஒப்பந்தத்தை மீறி கடந்தாண்டு 5,133 முறை பாகிஸ்தான் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளது.
புதுடெல்லி:
ஜம்மு - காஷ்மீரில் போர் ஒப்பந்த நிறுத்த ஒப்பந்தத்தை மீறி கடந்தாண்டு 5,133 முறை பாகிஸ்தான் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளது. பாகிஸ்தானின் அத்துமீறலில் பொதுமக்களில் 22 பேரும் பாதுகாப்பு படை வீரர்கள் 24 பேரும் உயிரிழந்துள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்தாண்டு நிகழ்ந்த 244 பயங்கரவாத தாக்குதலில் பொதுமக்களில் 37, சி.ஆர்.பி.எப் வீரர்கள் 62 பேர் மரணமடைந்துள்ளார். பாதுகாப்பு படை வீரர்களின் பதிலடியில் 221 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர் என்று மத்திய உள்துறை தகவல் அளித்துள்ளது.
ஜம்மு - காஷ்மீரில் கடந்தாண்டு போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறி பாகிஸ்தான் ராணுவம் 5,133 முறை அத்துமீறியுள்ளதாகவும், பாதுகாப்பு படையின் பதிலடி தாக்குதலில் 221 தீவிரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர் என்றும் மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.
Related Tags :
Next Story