மேற்கு வங்காளத்தில் பாஜக ஆட்சி அமைக்கும் - சிவராஜ் சிங் சவுகான் நம்பிக்கை

மேற்கு வங்காளத்தில் பாஜக ஆட்சி அமைக்கும் என மத்திய பிரதேச முதல்மந்திரியும், பாஜக மூத்த தலைவருமான சிவராஜ் சிங் சவுகான் தெரிவித்துள்ளார்.
போபால்,
மேற்கு வங்காளத்தில் 8 கட்டங்களாக சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. முதல் கட்ட தேர்தல் மார்ச் 27-ம் தேதி நடைபெறுகிறது. 8-ம் கட்ட தேர்தல் ஏப்ரல் 29-ம் தேதி நடைபெறுகிறது. தேர்தலில் பதிவான வாக்குகள் மே 2-ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது.
இதற்கிடையில், அம்மாநிலத்தில் ஆளும் திரிணாமுல் காங்கிரசுக்கும், பாஜக-வுக்கும் இடையே இத்தேர்தலில் நேரடி போட்டி ஏற்பட்டுள்ளது. இரு கட்சிகளும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.
இந்நிலையில், மேற்கு வங்காள தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது தொடர்பாக மத்திய பிரதேச மாநில முதல்மந்திரியும், பாஜக மூத்த தலைவருமான சிவராஜ் சிங் சவுகான் கருத்து தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக சவுகான் கூறுகையில்,
மேற்கு வங்காள சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுவிட்டது. அங்கு பாஜக அலை வீசிவருகிறது. மம்தா பானர்ஜி பயத்துடனும் கோபமாகவும் உள்ளார்.
ஆகையால் தான் பாஜக நடத்தும் பேரணிகள் தாக்கப்படுகிறது. பாஜக கட்சியினர் கொல்லப்படுகின்றனர். ஆனால், அவர்களது தியாகம் வீண்போகாது. மம்தா பானர்ஜியின் தவறான ஆட்சி முறை, வன்முறை தன்மை, ஊழல், கொள்ளை ஆகியவற்றில் இருந்து மேற்கு வங்காளம் மீண்டுவரும். மேலும், தேர்தலில் மிகப்பெரிய வெற்றிபெற்று மேற்கு வங்காளத்தில் பாஜக ஆட்சி அமைக்கும்.
என்றார்.
Related Tags :
Next Story