கேரளாவில் இன்று புதிதாக 3,254 பேருக்கு கொரோனா தொற்று உறுதி + "||" + 3,254 new COVID19 cases & 15 deaths reported in Kerala today. Kerala government
கேரளாவில் இன்று புதிதாக 3,254 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
கேரளாவில் இன்று புதிதாக 3,254 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
திருவனந்தபுரம்,
நாட்டிலேயே கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள மாநிலமாக தற்போது கேரளா உள்ளது. இந்த நிலையில் மாநிலத்தில் இன்று புதிதாக 3,254 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 10,59,752 லட்சமாக உயர்ந்துள்ளது.
அதேபோல், இன்று ஒரே நாளில் 4,333 பேர் கொரோனா தொற்றில் இருந்து குணம் அடைந்துள்ளனர். இதன்மூலம் மாநிலத்தில் இதுவரை கொரோனாவில் இருந்து குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 10,05,497 ஆக உயர்ந்துள்ளது.
கொரோனா பாதிப்பால் கடந்த 24 மணி நேரத்தில் 15 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை உயிரிழந்தவர்கள் மொத்த எண்ணிக்கை 4,197 ஆக உயர்ந்துள்ளது. தற்போது கொரோனா பாதிப்பால் 49,420 பேர் சிகிச்சையில் உள்ளனர் என்று அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.