ஊரடங்கை தவிர்க்க மக்கள் கண்டிப்பாக மாஸ்க் அணிய வேண்டும்: உத்தவ் தாக்கரே
ஊரடங்கை தவிர்க்க மக்கள் கண்டிப்பாக மாஸ்க் அணிய வேண்டும் என்று மராட்டிய முதல்வர் உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார்.
மும்பை,
மராட்டியத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு மீண்டும் அதிகரிக்கத்தொடங்கியுள்ளது. குறிப்பாக கடந்த 4 தினங்களாக 8 ஆயிரத்திற்கும் மேல் கொரோனா பாதிப்பு பதிவாகி வருகிறது. இதனால், தொற்று பரவல் அதிகமாக உள்ள சில மாவட்டங்களில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. தொற்று தடுப்பு நடவடிக்கைகளும் தீவிர படுத்தப்பட்டுள்ளன.
இந்த நிலையில், மராட்டியத்தில் மீண்டும் ஊரடங்கு அமல்படுத்த தான் விரும்பவில்லை எனக் கூறியுள்ள அம்மாநில முதல்வர் உத்தவ் தாக்கரே, எனினும் கையறு நிலையும் வரலாம் என்று தெரிவித்துள்ளார். உத்தவ் தாக்கரே மேலும் கூறுகையில், ஊரடங்கை தவிர்க்க மக்கள் கண்டிப்பாக முகக்கவசம் அணிய வேண்டும்” என்றார்.
Related Tags :
Next Story