சுஷாந்த் சிங் மரணத்தின் போது கூப்பாடு போட்டவர்கள், சுயேச்சை எம்.பி மோகன் தேல்கார் மரணத்தில் மவுனம் காப்பது ஏன்? சஞ்சய் ராவத் கேள்வி


சஞ்சய் ராவத் எம்.பி
x
சஞ்சய் ராவத் எம்.பி
தினத்தந்தி 1 March 2021 3:20 PM IST (Updated: 1 March 2021 3:20 PM IST)
t-max-icont-min-icon

சுஷாந்த் சிங் மரணத்தின் போது கூப்பாடு போட்டவர்கள் சுயேச்சை எம்.பி.யின் மரணத்தில் மவுனம் காப்பது ஏன்? என சஞ்சய் ராவத் எம்.பி. கேள்வி எழுப்பி உள்ளார்.

எம்.பி. தற்கொலை
குஜராத்தையொட்டி உள்ள யூனியன் பிரதேசமான தாத்ரா நகர் ஹவேலி எம்.பி.யாக 7 முறை இருந்தவர் மோகன் தேல்கார்(வயது58). சுயேச்சை எம்.பி.யான இவர் கடந்த 22-ந் தேதி மும்பையில் உள்ள ஓட்டலில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இவரது அறையில் எழுதி வைத்து இருந்த கடிதத்தை போலீசார் கைப்பற்றினர். அதிகாரிகள், அரசியல் கட்சியினர் எம்.பி.யை அவமதித்து, அவமானப்படுத்தியதாக அதில் எழுப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது.

சஞ்சய் ராவத் கேள்வி
இந்தநிலையில் நடிகர் சுஷாந்த் சிங் மரணத்தின் போது அழுது கூப்பாடு போட்டவர்கள் தற்போது மவுனமாக இருப்பது ஏன்? என சிவசேனாவை சேர்ந்த சஞ்சய் ராவத் எம்.பி. சாம்னாவில் கேள்வி எழுப்பி உள்ளார். இது குறித்து அவர், "நடிகரின் தற்கொலை மற்றும் நடிகையின் சட்டவிரோத கட்டிடத்தை இடித்த போது பரபரப்பு ஏற்படுத்தப்பட்டது. ஆனால் 7 முறை எம்.பி.யாக இருந்தவர் மர்மமான முறையில் உயிரிழந்த போது அமைதி நிலவுவது எப்படி என எனக்கு ஆச்சரியமாக உள்ளது.

டெல்லி, குஜராத்தில் வீடு உள்ள போதும் குற்றவாளிகள் மீது மும்பை போலீசார் நடவடிக்கை எடுப்பார்கள் என மோகன் தேல்கார் நினைத்து இருப்பார் என நினைக்கிறேன்" என கூறியுள்ளார்.

Next Story