கிரிமினல் வழக்குகளை சிம்லாவுக்கு மாற்றக்கோரி சுப்ரீம் கோர்ட்டை நாடிய நடிகை கங்கனா ரணாவத்


நடிகை கங்கனா ரணாவத்
x
நடிகை கங்கனா ரணாவத்
தினத்தந்தி 2 March 2021 6:45 PM IST (Updated: 2 March 2021 6:45 PM IST)
t-max-icont-min-icon

பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத் மராட்டிய மாநில அரசுக்கு எதிரான கருத்துகளை கூறினார். மேலும், டுவிட்டரில் சர்ச்சைக்குரிய வகையில் கருத்துகளை பதிவு செய்தார்.

மும்பை போலீஸ் குறித்தும் விமர்சனம் செய்திருந்தார். இதனால் அவர் மீதும், அவரது சகோதரி ரங்கோலி மீதும் மும்பையின் பல்வேறு பகுதிகளில் கிரிமினல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. பெரும்பாலான வழக்குகள் இன்னும் நிலுவையில் உள்ளன.

இந்நிலையில் அவர் மீதும், அவரது சகோதரி மீதும் போடப்பட்டுள்ள அனைத்து கிரிமினல் வழக்குகளையும் இமாசல பிரதேச மாநிலம் சிம்லாவுக்கு மாற்ற உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என சுப்ரீம் கோர்ட்டில் கங்கனா ரணாவத் மனுதாக்கல் செய்துள்ளார்.


Next Story