சிக்கமகளூருவில் மாணவிகளுக்கு பாடம் நடத்திய கலெக்டர்
சிக்கமகளூருவில் உள்ள பெண்கள் பள்ளியை ஆய்வு செய்த கலெட்ர ரமேஷ், மாணவிகளுக்கு அறிவியல் பாடத்தை நடத்தினார்.
பெங்களூரு,
கர்நாடக மாநிலத்தில் உள்ள சிக்கமகளூரு மாவட்டத்தின் புதிய கலெக்டராக ரமேஷ் நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த வாரம் தனது பொறுப்புகளை அவர் ஏற்றுக்கொண்டார். இந்த நிலையில் நேற்று சிக்கமகளூரு நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள பசவனஹள்ளி குளத்துக்கு அவர் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அதனை தொடர்ந்து சிக்கமகளூரு டவுன் பசவனஹள்ளி பகுதியில் உள்ள பெண்கள் பள்ளிக்கு நேற்று கலெக்டர் ரமேஷ் சென்று ஆய்வு செய்தார். அப்போது ஒரு வகுப்பறைக்கு சென்ற கலெக்டர் ரமேஷ், மாணவிகளுக்கு அறிவியல் பாடத்தை நடத்தினார்.
அப்போது அவர், மாணவிகள் கல்வி கற்பதில் அக்கறை காட்ட வேண்டும். பெற்றோருக்கு நல்ல பெயர் எடுத்து கொடுக்கும் வகையில் நன்றாக படித்து, நல்ல மதிப்பெண் பெற வேண்டும். யாரும் செல்போனில் மூழ்கி கிடக்கக்கூடாது. அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டும் செல்போனை பயன்படுத்த வேண்டும் என்று மாணவிகளுக்கு அறிவுரை கூறினார்.
Related Tags :
Next Story