வேளாண் சட்ட விவகாரம்; இந்தி நடிகர் அஜய் தேவ்கன் காரை மறித்தவர் கைது
பிரபல இந்தி நடிகர் அஜய் தேவ்கன் காரை மறித்தவர் கைது செய்யப்பட்டார்.
மும்பை,
மும்பை கோரோகாவ் பிலிம் சிட்டிக்கு நேற்று காலை 10.30 மணியளவில் இந்தி நடிகர் அஜய் தேவ்கன் காரில் வந்தார். அப்போது அவரது காரை வாலிபர் ஒருவர் திடீரென வழிமறித்தார். நீங்கள் ஏன் மத்திய அரசின் வேளாண் சட்டங்களை கண்டிக்கவில்லை என்று கேள்வி எழுப்பி தகராறில் ஈடுபட்டார்.
இது தொடர்பாக நடிகரின் மெய்க்காப்பாளர் பிரதீப் கவுதம் தின்தோஷி போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் அந்த நபரை கைது செய்தனர். விசாரணையில், அந்த வாலிபரின் பெயர் ராஜ்தீப் சிங் என்றும், மும்பை வடக்கு புறநகர் சந்தோஷ் நகரில் வசித்து வருபவர் என்பதும் தெரியவந்தது. மேலும் பஞ்சாபை சேர்ந்த இவர் டிரைவராக வேலை செய்து வருவதும் தெரியவந்தது.
Related Tags :
Next Story