மேற்கு வங்கத்தில் பாஜக வெற்றி பெற்றால் தொழிலையே விட்டு விடுகிறேன் - அரசியல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர்


மேற்கு வங்கத்தில் பாஜக வெற்றி பெற்றால் தொழிலையே விட்டு விடுகிறேன் - அரசியல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர்
x
தினத்தந்தி 3 March 2021 3:50 PM IST (Updated: 3 March 2021 3:50 PM IST)
t-max-icont-min-icon

மேற்கு வங்கத்தில் பாஜக வெற்றி பெற்றால் தொழிலையே விட்டு விடுகிறேன் என்று அரசியல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர் தெரிவித்துள்ளார்.

கொல்கத்தா,

மேற்குவங்காளம் முதல்-மந்திரி மம்தாபானர்ஜி, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோருக்கு தேர்தல் வியூகங்களை வகுத்து கொடுத்து வருகிறார். பிரபல அரசியல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர். இவரின் ஐ-பேக் நிறுவனம் பல்வேறு தேர்தல் வியூகங்களை வகுத்து கொடுத்து வருகிறது. இவர் தற்போது பஞ்சாப் முதல்-மந்திரியின் அமரீந்தர் சிங்கின் முதன்மை ஆலோசகராகவும் நியமிக்கப்பட்டுள்ளார். 

இந்நிலையில், இந்தியா டுடே டிவி சேனலுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது: 

மேற்குவங்காளத்தில் பாஜக 100 இடங்களுக்கும் மேல் வென்றால் நான் என் தொழிலையே விட்டு விடுகிறேன். ஐ-பேக்கையே விட்டு விடுகிறேன்.

மேற்குவங்காளத்தில் மம்தா, எங்களுக்கு நிறைய சுதந்திரம் வழங்கி உள்ளார். பாஜக போடும் சில கூட்டங்களில் 200-300 பேர் கூட தேறுவதில்லை, மோடி கூட்டத்துக்கு மட்டும் தான் கூட்டம் வருகிறது. 

நிறைய பேர் திரிணாமுல் காங்கிரஸிலிருந்து பாஜகவுக்கு தாவுவதும், மற்ற கட்சி தலைவர்களிடம் ஆசைவலை விரிப்பது  பாஜக.,வின் உத்தி என்றார்.

Next Story