மராட்டிய மாநிலத்தில் தொடர்ந்து உயரும் கொரோனா பாதிப்பு: புதிதாக 8,998 பேருக்கு தொற்று உறுதி
மராட்டிய மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 8,998 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
மும்பை,
மராட்டிய மாநில சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, அங்கு கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 8,998 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 21 லட்சத்து 88 ஆயிரத்து 183 ஆக உயர்ந்துள்ளது.
கொரோனா பாதிப்பு காரணாமாக மேலும் 60 பேர் உயிரிழந்ததை அடுத்து இதுவரை இறப்பு மொத்த எண்ணிக்கை 52 ஆயிரத்து 340 ஆக உயர்ந்தது. இதுவரை மராட்டியத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து 20 லட்சத்து 49 ஆயிரத்து 484 பேர் குணமடைந்து உள்ளனர். இதில் நேற்று நோயில் இருந்து விடுபட்ட 6 ஆயிரத்து 135 பேரும் அடங்குவார்கள். மேலும் 85 ஆயிரத்து 144 பேர் தற்போது சிகிச்சையில் உள்ளனர்.
Related Tags :
Next Story