இந்தியா மற்றும் ஸ்வீடன் பிரதமர்களிடையே இன்று காணொலி வாயிலாக உச்சிமாநாடு
இந்தியா மற்றும் ஸ்வீடன் நாட்டு பிரதமர்களிடையே இன்று காணொலி வாயிலாக உச்சிமாநாடு நடைபெற உள்ளது.
புதுடெல்லி,
பிரதமர் மோடி மற்றும் ஸ்வீடன் பிரதமர் ஸ்டீபன் லோபென் இடையிலான உச்சிமாநாடு இன்று நடைபெற உள்ளது. காணொளி வாயிலாக நடைபெறும் இந்த உச்சிமாநாட்டில், இரு தலைவர்களும் இருதரப்பு உறவுகள் மற்றும் பிராந்திய மற்றும் உலகளாவிய பிரச்சினைகள் குறித்து விரிவாக கலந்துரையாட உள்ளனர்.
கொரோனா காலத்திற்கு பிந்தைய ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவது குறித்தும் பேச உள்ளனர். 2015ம் ஆண்டுக்கு பிறகு இரு தலைவர்களும் 5வது முறையாக கலந்துரையாடுவது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவும் ஸ்வீடனும் நெருங்கிய நட்புறவைக் கொண்டுள்ளன. வர்த்தகம் மற்றும் முதலீடு, புதுமை, அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு ஆகிய துறைகளில் இரு நாடுகளும் மிக நெருக்கமான ஒத்துழைப்பைக் கொண்டுள்ளன. சுகாதாரம் மற்றும் வாழ்க்கை அறிவியல், வாகனத் தொழில், பாதுகாப்பு, கனரக இயந்திரங்கள் மற்றும் உபகரணங்கள் போன்ற பல்வேறு துறைகளில் 250 ஸ்வீடன் நிறுவனங்கள் இந்தியாவில் செயல்பட்டு வருகின்றன. சுமார் 75 இந்திய நிறுவனங்கள் ஸ்வீடனில் செயல்படுகின்றன.
Related Tags :
Next Story