பிரதமர் மோடியின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாகிறது!
பிரதமா் நரேந்திர மோடியின் வாழ்க்கை வரலாறு 'ஏக் ஒளா் நரேன்' (மற்றுமொரு நரேன்) என்ற பெயரில் திரைப்படமாகத் தயாராகவுள்ளது.
புதுடெல்லி,
பிரதமா் நரேந்திர மோடியின் வாழ்க்கை வரலாறு 'ஏக் ஒளா் நரேன்' (மற்றுமொரு நரேன்) என்ற பெயரில் திரைப்படமாகத் தயாராகவுள்ளது.
வங்க மொழித் திரைப்பட இயக்குநா் மிலன் பௌமிக், பிரதமா் மோடியின் வாழ்க்கை வரலாற்றைத் திரைப்படமாக்கவுள்ளாா். அந்தப் படத்தில் பிரதமா் மோடியின் வேடத்தில் தொலைக்காட்சி நடிகா் கஜேந்திர சௌஹான் நடிக்கவுள்ளாா்.
கொல்கத்தாவை சோந்த தயாரிப்பு நிறுவனம் இத்திரைப்படத்தைத் தயாரிக்கவுள்ளது. டெல்லி நிா்பயா மீதான பாலியல் வன்கொடுமை-கொலை சம்பவம், ஜன சங்க நிறுவனா்களில் ஒருவரான சியாமாபிரசாத் முகா்ஜியின் வாழ்க்கை வரலாறு ஆகியவற்றை இயக்குநா் மிலன் பௌமிக் ஏற்கெனவே திரைப்படமாக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story