உத்தரகாண்ட் ஆளுநர் பேபி ராணி மவுரியா கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார்


உத்தரகாண்ட் ஆளுநர் பேபி ராணி மவுரியா கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார்
x
தினத்தந்தி 5 March 2021 3:23 PM IST (Updated: 5 March 2021 3:23 PM IST)
t-max-icont-min-icon

உத்தரகாண்ட் ஆளுநர் பேபி ராணி மவுரியாவுக்கு கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸ் செலுத்தப்பட்டது.

டெஹ்ராடூன் ,

60 வயதை கடந்தவர்களுக்கும், பிற நோய்களை கொண்ட 45 வயதை கடந்தவர்களுக்கும் கொரோனா தடுப்பூசி போடும் பணி, கடந்த 1-ந் தேதி தொடங்கியது. முதல் நாளிலேயே பிரதமர் மோடி தடுப்பூசி போட்டுக்கொண்டார். ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், மத்திய மந்திரிகள், முதல்-மந்திரிகள், அரசியல் கட்சி தலைவர்கள் என அடுத்தடுத்து பல பிரபலங்களும் தடுப்பூசி போட்டுக்கொண்டனர்.

இந்தநிலையில், நேற்று மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன், முதல் டோஸ் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார்.  முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங், அவருடைய மனைவி குர்சரண் கவுரும் தடுப்பூசி போட்டுக்கொண்டார். கர்நாடக கவர்னர் வஜுபாய் வாலா, பெங்களூரு கே.சி.ஜெனரல் ஆஸ்பத்திரியில் ‘கோவிஷீல்டு’ தடுப்பூசி போட்டுக்கொண்டனர்.

இந்த நிலையில், உத்தரகாண்ட் ஆளுநர் பேபி ராணி மவுரியா இன்று கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார். உத்தரகாண்டில் உள்ள டெஹ்ராடூனின் டூன் மருத்துவமனையில்  கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸ் ஆளுநர் பேபி ராணி மவுரியாவுக்கு போடப்பட்டது.


Next Story