ராணுவ அதிகாரிகள் மாநாட்டில் பங்கேற்பதற்காக குஜராத் வந்தடைந்தார் பிரதமர் மோடி!
ராணுவ அதிகாரிகள் மாநாட்டில் பங்கேற்று உரையாற்றுவதற்காக பிரதமர் மோடி இன்று குஜராத் வந்தடைந்தார்.
புதுடெல்லி,
குஜராத் மாநிலம் நர்மதா மாவட்டத்தில் உள்ள கெவாடியா நகரில் ராணுவ அதிகாரிகள் மாநாடு கடந்த வியாழக்கிழமை தொடங்கி நடைபெற்று வருகிறது. மூன்று நாட்கள் நடைபெறும் இம்மாநாட்டில் தேசியப் பாதுகாப்பு, எல்லைப் பிரச்சினைகள், அண்டை நாடுகளுடனான ராணுவ உறவு உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், இந்த மாநாட்டின் இறுதி நாளான இன்று (சனிக்கிழமை), பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று உரையாற்றவுள்ளார். இதற்காக பிரதமர் மோடி டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் குஜராத் மாநிலம் ஆமதாபாத் விமான நிலையம் வந்தடைந்தார். அங்கு பிரதமர் மோடியை ஆளுநர் ஆச்சார்யா தேவ்ரத், முதல்வர் விஜய் ரூபானி, துணை முதல்வர் நிதின் படேல் ஆகியோர் வரவேற்றனர்.
லடாக்கில் சீனாவுடன் மோதல் போக்கு நீடித்து வரும் நிலையில் இந்த உயர் அதிகாரிகளின் மாநாடு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. இந்த மாநாட்டில் ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங், முப்படை தலைவர் பிபின் ராவத், ராணுவ தளபதி நரவனே, விமானப்படை தளபதி பதாரியா, கடற்படை தளபதி கரம்பிர் சிங் மற்றும் ராணுவ அமைச்சக மூத்த அதிகாரிகள் உள்பட பலர் கலந்துகொள்கிறார்கள்.
Related Tags :
Next Story