கொரோனா தடுப்பூசி, கர்ப்பத்தை தடுக்காது - நிபுணர்கள் ஆய்வில் தகவல்
கொரோனா தடுப்பூசி, கர்ப்பத்தை தடுப்பதாக வெளியான தகவலில் உண்மை இல்லை என்று நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
கொல்கத்தா,
கொரோனாவுக்கு எதிராக உலகின் பெரும்பாலான நாடுகளில் தடுப்பூசிகள் பயன்பாட்டில் வந்துள்ளன. இந்த தருணத்தில் கொரோனா தடுப்பூசி, கர்ப்பத்தை தடுக்கும் என்ற தகவல் பரவி உள்ளது. ஆனால் இது தவறான தகவல், இதற்கு எந்தவொரு ஆதாரமும் இல்லை என்று தெரிய வந்துள்ளது.
தடுப்பூசிகள் பெண்களை கர்ப்பம் அடையச்செய்வதில், அவர்களுக்கோ அல்லது ஆண்களுக்கோ தடையாக அமையும் என்பதற்கு உலகளவில் எந்தவொரு ஆய்வுத்தகவலும் இல்லை என நிபுணர்களின் உறுதியான தகவல்கள் கூறுகின்றன.
இதுகுறித்து தேசிய தடுப்பூசி திட்டத்தின் ஆலோசகர் டாக்டர் நரேஷ் புரோகித் காணொலி காட்சி வழியிலான ஒரு கருத்தரங்கில் பேசும்போது, “தடுப்பூசியில் உள்ள ஆர்.என்.ஏ. பொருள், நஞ்சுக்கொடியில் உள்ள சின்சிட்டின்-1 என்ற புரதத்தை தாக்கும் என்ற அடிப்படையில் புரளிகள் பரவுகின்றன.
இந்த புரதமானது, கொரோனா வைரசின் ஸ்பைக் புரதத்தை போன்ற கட்டமைப்பை கொண்டிருக்கிறது. இருந்தாலும், இவ்விரண்டுமே வெவ்வேறு கட்டமைப்பை கொண்டுள்ளன. எனவே கர்ப்பத்துக்கு தடையாக தடுப்பூசி இருக்காது” என குறிப்பிட்டார்.
Related Tags :
Next Story