நாட்டில் சகோதரத்துவத்தை நிலைநாட்டுவது மத்திய அரசின் பொறுப்பு - சரத்பவார் பேச்சு
நாட்டில் சகோதரத்துவத்தை நிலைநாட்டுவது மத்திய அரசின் பொறுப்பு. ஆனால், பாஜக வகுப்புவாத விஷத்தை பரப்பி வருகிறது என தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் தெரிவித்துள்ளார்.
ராஞ்சி,
மராட்டிய மாநிலத்தில் சிவசேனா - காங்கிரஸ் - தேசியவாத காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. அம்மாநிலத்தின் முதல்மந்திரியாக சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே செயல்பட்டு வருகிறார்.
இந்நிலையில், தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் சரத்பவார் இன்று ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றார்.
அந்த நிகழ்ச்சியில் பேசிய சரத்பவார், ’நாட்டில் சகோதரத்துவத்தை நிலைநாட்டுவது மத்திய அரசின் பொறுப்பு. ஆனால், பாஜக வகுப்புவாத விஷத்தை பரப்பி வருகிறது. விவசாயிகள் 100 நாட்களாக போராடி வருகின்றனர். பிரதமர் மோடிக்கு கொல்கத்தா சென்று மேற்குவங்காள அரசுக்கு எதிராக பொதுக்கூட்டம் நடத்த நேரம் இருக்கிறது. ஆனால், டெல்லியில் போராடி வரும் விவசாயிகளை சந்திக்க நேரமில்லை’ என்றார்.
மேற்குவங்காள சட்டசபை தேர்தலையொட்டி பாஜக-வுக்கு ஆதரவாக பிரதமர் மோடி கொல்கத்தாவில் நடைபெற உள்ள பிரசார கூட்டத்தில் இன்று பங்கேற்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story