மராட்டிய மாநிலத்தில் தொடரும் கொரோனா பாதிப்பு: புதிதாக 11,141 பேருக்கு தொற்று உறுதி


கோப்புப்படம்
x
கோப்புப்படம்
தினத்தந்தி 7 March 2021 10:16 PM IST (Updated: 7 March 2021 10:16 PM IST)
t-max-icont-min-icon

மராட்டிய மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 11,141 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

மும்பை, 

மராட்டிய மாநில சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 11,141 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 22 லட்சத்து 19 ஆயிரத்து 727 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனா பாதிப்பு காரணாமாக மேலும் 38 பேர் உயிரிழந்ததை அடுத்து இதுவரை இறப்பு மொத்த எண்ணிக்கை 52 ஆயிரத்து 478 ஆக உயர்ந்தது. இதுவரை மராட்டியத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து 20 லட்சத்து 68 ஆயிரத்து 044 பேர் குணமடைந்து உள்ளனர். இதில் கொரோனா பாதிப்பில் இருந்து இன்று விடுபட்ட 6 ஆயிரத்து 013 பேரும் அடங்குவார்கள். கொரோனா பாதிப்பு காரணமாக 97 ஆயிரத்து 983 பேர் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர். 

Next Story