பா.ஜ.க. தவறான செய்திகளை பரப்பி வருகிறது; பரூக் அப்துல்லா குற்றச்சாட்டு


பா.ஜ.க. தவறான செய்திகளை பரப்பி வருகிறது; பரூக் அப்துல்லா குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 8 March 2021 7:00 AM IST (Updated: 8 March 2021 7:00 AM IST)
t-max-icont-min-icon

காஷ்மீரில் பிற தலைவர்களை ஒருவருடன் ஒருவர் சண்டை போட்டு கொள்ள செய்யும் வேலையில் பா.ஜ.க. ஈடுபட்டு வருகிறது என பரூக் அப்துல்லா குற்றச்சாட்டாக கூறியுள்ளார்.

உதாம்பூர்,

காஷ்மீர் முன்னாள் முதல் மந்திரி பரூக் அப்துல்லா செய்தியாளர்களிடம் கூறும்பொழுது, ஒரு சில நாட்களுக்கு முன்பு, ஜார்க்கண்ட் முதல் மந்திரி என கூறி கொண்டு ஒருவர் தொலைபேசியில் என்னிடம் பேசினார்.

அவர், கொல்கத்தா நகரில் மம்தா பானர்ஜிக்காக வேலை செய்து விட்டு ரூ.50 லட்சம் வாங்கி கொள்ளுங்கள் என கூறினார்.  இதுபற்றி ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா எம்.பி.யை தொடர்பு கொண்டு பேசினேன்.

அதற்கு அவர், முன்னாள் பிரதமரான தேவகவுடாஜிக்கும் இதேபோன்ற தொலைபேசி அழைப்பு வந்தது என கூறினார்.  பா.ஜ.க. பொய்களை பரப்பி வருகிறது.  எங்களை குழிக்குள் தள்ள எல்லாவற்றையும் பயன்படுத்தும் என அவர் குற்றச்சாட்டாக கூறியுள்ளார்.

Next Story