பெண்கள் சுய உதவி குழுக்கள் மூலம் தயாரிக்கப்பட்ட பொருட்களை வாங்கிய பிரதமர் மோடி


பெண்கள் சுய உதவி குழுக்கள் மூலம் தயாரிக்கப்பட்ட பொருட்களை வாங்கிய பிரதமர் மோடி
x
தினத்தந்தி 8 March 2021 4:42 PM IST (Updated: 8 March 2021 4:42 PM IST)
t-max-icont-min-icon

சர்வதேச பெண்கள் தினத்தையொட்டி பிரதமர் மோடி பெண்கள் சுய உதவி குழுக்கள் மூலம் தயாரிக்கப்பட்ட கைவினை பொருட்கள், காதி பொருட்களை வாங்கியுள்ளார்.

புதுடெல்லி,

சர்வதேச மகளிர் தினம் ஆண்டுதோறும் மார்ச் 8-ம் தேதி கொண்டாடப்பட்டு வருகிறது. அந்தவகையில், இன்று சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. 

இதையொட்டி, குடியரசு தலைவர், பிரதமர் உள்பட பல்வேறு தலைவர்கள், அரசியல் கட்சியினர், பிரபலங்கள் என பல துறைகளை சேர்ந்தவர்களும் மகளிர் தின வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். தெலுங்கானா மாநிலத்தில் அனைத்து பெண் ஊழியர்களுக்கும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், பெண்கள் தினத்தினத்தையொட்டி பிரதமர் மோடி பெண்கள் சுய உதவி குழுக்கள் மூலம் பழங்குடியின மக்கள் மற்றும் பல்வேறு தரப்பு பெண்கள் மூலம் தயாரிக்கப்பட்ட கைவினை பொருட்கள், காதி பொருட்களை வாங்கியுள்ளார். 

நாரிசக்தி திட்டத்தின் கீழ் செயல்பட்டு வரும் சுய உதவி குழுக்கள் மூலம் தயாரிக்கப்பட்டு ஆன்லைனில் விற்பனை செய்யப்பட்டு வரும் சில பொருட்களை பிரதமர் மோடி வாங்கியுள்ளார். தான் வாங்கியுள்ள பொருட்கள் எவை என்பது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் அந்த பொருட்களின் விவரங்களை பகிர்ந்துள்ளார். அவற்றில் கைவினை பொருட்களால் உருவாக்கப்பட்ட காகித ஓவியம், சால்வை, துண்டு உள்ளிட்டவை அடங்கும்.



Next Story