கொல்கத்தா தீ விபத்தில் 7 பேர் பலி: ரூ.10 லட்சம் இழப்பீடு; முதல் மந்திரி அறிவிப்பு


கொல்கத்தா தீ விபத்தில் 7 பேர் பலி:  ரூ.10 லட்சம் இழப்பீடு; முதல் மந்திரி அறிவிப்பு
x
தினத்தந்தி 9 March 2021 12:55 AM IST (Updated: 9 March 2021 12:55 AM IST)
t-max-icont-min-icon

கொல்கத்தா தீ விபத்தில் உயிரிழந்தோரின் உறவினர்களுக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என முதல் மந்திரி மம்தா கூறியுள்ளார்.

கொல்கத்தா,

மேற்கு வங்காளத்தின் கொல்கத்தா நகரில் ஸ்டிராண்ட் சாலையில் உள்ள பல அடுக்கு கட்டிடம் ஒன்றில் திடீரென இரவில் தீ விபத்து ஏற்பட்டது.  இதுபற்றிய தகவலறிந்து, 8 தீயணைப்பு வாகனங்கள் சம்பவ பகுதிக்கு உடனடியாக சென்றன.  அவர்கள் தீயை அணைக்கும் பணியில் தீவிரமுடன் ஈடுபட்டனர்.

அந்த கட்டிடத்தின் 13வது தளத்தில் தீ விபத்து ஏற்பட்டு உள்ளது.  இதுபற்றி தீ மற்றும் அவசரகால சேவையை சேர்ந்த சுஜித் போஸ் கூறும்பொழுது, குறைந்த அளவே இடவசதி உள்ளது.  அதனால் ஏணியை வைப்பதற்கு கூட சிரமம் ஏற்பட்டு உள்ளது என கூறினார்.

எனினும், தீ விபத்தில் 7 பேர் உயிரிழந்து உள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.  இதுபற்றி முதல் மந்திரி மம்தா பானர்ஜி கூறும்பொழுது, இது மிகவும் வருத்தத்திற்குரியது.  உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்கப்படும்.

அவர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு பணி வழங்கப்படும் என்று கூறியுள்ளார்.

Next Story